ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் வீட்டில் திருட்டு-மர்ம நபர்கள் கைவரிசை!
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து ஓய்வு பெற்ற துணைவட்டாட்சியர் வீட்டில் நகைகள் திருட்டு.
Update: 2024-02-25 07:18 GMT
கோவை:ஓய்வு பெற்ற துனை வட்டாட்சியர் நாகேந்திரன் சரவணம்பட்டி மகாத்மா நகர் பகுதியில் வசித்து வருகிறார்.இவரது மனைவிக்கு உடல் நலம் பாதிக்கபட்டதால் அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு உதவியாக நாகேந்திரன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்மணி நாகேந்திரனை அழைத்து வீட்டின் முன்பக்க கதவு உடைக்கபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்தவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு மோதிரம்,செயின்,கம்மல்,தங்க காசு மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியன திருடு போயிருப்பது தெரியவந்தது.இதனையடுத்து நாகேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.