மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்:உயர்நீதிமன்றம்

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-14 10:16 GMT

சென்னை உயர்நீதிமன்றம்

குரூப் 2 ஏ தேர்வில் கலந்து கொண்ட மூன்றாம் பாலின விண்ணப்பதாரரான அனுஸ்ரீ என்பவர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கக் கோரி வழக்கு. உரிய வாய்ப்புகளை வழங்க மறுத்தால், கல்வித் தகுதி பெற்ற மூன்றாம் பாலினத்தவர்கள்,

தற்போது சமூகத்தில் உள்ள அசாதாரணமான வாழ்க்கைக்கே தள்ளப்படுவர் என நீதிபதி அச்சம்.

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்கி, தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை என நீதிபதி பவானி சுப்பராயன் கருத்து.

Tags:    

Similar News