திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம்

திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம்;

Update: 2024-04-23 16:01 GMT
திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம்

பிரம்மோற்சவ விழா

  • whatsapp icon
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இம்மாதம், 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், ஒவ்வொரு வாகனத்திலும் காலை, மாலை என இரு வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு உற்சவர் முருகர், வள்ளி தெய்வானை யுடன் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்திலும், குதிரை வாகனத்திலும் வலம் வந்தார். பின் உற்சவர் முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் சேர்மன் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News