ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் - பக்தர்கள் தரிசனம்
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி எதிரில் ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் பக்தர்கள் தரிசனம்.
Update: 2024-02-25 12:05 GMT
தர்மபுரி அரசு கலைக் கல்லூரி எதிரில் சவுளுப்பட்டி நேரு நகரில் உள்ள ஆதிநாயகி சமேத ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோயிலில் கொடியேற்று விழா நடைபெற்றது .விழாவையொட்டி கெ டிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து முதல்கால ஏகாதச் ருத்ரபாராயணஹோமம் நடந்தது. அது தொடர்ந்து கணபதி ஹோமம் வாஸ்து பூஜை திருக்கொடியேற்றம் ஏற்றப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் அது தொடர்ந்து பக்தர்கள் கங்காணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது அதைத்தொடர்ந்து முதல்கால ஏகாதச ருத்ரபாராயண ஹோமம் இரண்டாம் கால ஏகாதசி ருத்ரபாராயண ஹோமம் மற்றும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. நேற்று இரவு 8 மணி அளவில் திருக்கல்யாண வைபவமும் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . இதில் கோவில் தர்மகர்த்தா சிவலிங்கம் மற்றும் சங்கர் கோமதி .ரமேஷ் கருணாநிதிமகேஸ்வரி. தியாகராஜன் தனலட்சுமி .டில்லிராஜ். முருகவேல் மல்லிகா .முத்துராஜ் நாகஜோதி .சிவலிங்கம் கமலா .மாது கீதாலட்சுமி. திருக்கோவில் அர்ச்சகர் சபரிநாதன் மற்றும் விழ விற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.