திருத்தணி முருகன் தரிசனம்: 2 மணி நேரம் காத்திருப்பு

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்ததால், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-08 09:16 GMT

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்ததால், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாா்கழி மாதத்தையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மூலவருக்கு தங்கக் கவசம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையில் இருந்தே திரளான பக்தா்கள் முருகன் மலைக் கோயில் திரண்டனா். பெண்கள் மாலை அணிந்து வந்து நீண்ட வரிசையில் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். சிறப்பான ஏற்பாடுகளை முருகன் கோயில் ஆணையா் க.ரமணி மற்றும் கோயில் அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன், கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

Tags:    

Similar News