திருத்தணி முருகன் கோயில் தேரோட்டம்
திருத்தணிமுருகன் கோயில் மாசி பிரம்மோற்சவம் விழாவில் 7 ஆம் நாள் முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி என அழைக்கப்படும்.
முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினசரி மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி. தங்க கவசம்.பச்சைக்கல் மரகத மாலை வைரகிரீடம் மற்றும் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
தினந்தோறும் வள்ளி, தேவயானை சமேதரராய் உற்சவ மூர்த்தி முருகக்க கடவுள் சிம்ம வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம், புலி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தேர் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் மாசிப் பிரம்மோற்சவம் விழாவின் ஏழாம் நாளான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடை பிடித்து இழுத்து தங்கள் நேற்றி கடனை செலுத்தினர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.