ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் திருத்தேரோட்ட கோலாகலம்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து ராஜவீதியில் திருத்தேர் வலம் வந்தது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து ராஜவீதியில் திருத்தேர் வலம் வந்தது.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு பரிகார திருத்தலங்களும் புகழ் பெற்ற திவ்ய தேசங்களும் அமைந்துள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கட்சிபேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. தலை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு காணும் இத்திருத்தலம் பரிகார தலமாக அமைந்துள்ளது.
இத்திருக்கோயின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த ஏழு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி நால்வரும் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ கட்சபேஸ்வரர் ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். இன்று ஏழாம் நாள் உற்சவமான திருத்தேர் உற்சவம் காலை சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கட்சிபேஸ்வரர் எழுந்தருளி ஏராளமான பக்தர்கள் வடம்பிடிக்க நான்கு ராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் கோடை காலத்தை ஒட்டி மோர் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.