திருவண்ணாமலை: டிச., 27ல் பக்தர்களுக்கு தீப மை விநியோகம்

Update: 2023-12-01 06:11 GMT

மகா தீபம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா கடந்த, 17 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. விழாவில் தினமும் காலை மற்றும் இரவில், சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. கடந்த, 26 ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கடந்த, 3 நாட்களாக தெப்பம் உற்சவம் நடந்து வந்த நிலையில், நிறைவு விழாவான நேற்று, சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. இதில் இரவு, 10:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம், 11 நாட்கள் தொடர்ந்து எரியும். பின் மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம், வரும், 27ம் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று, சிவகாமி சமேத நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டு, பின் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News