குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - எஸ் பி
குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என எஸ் பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
Update: 2024-03-07 04:06 GMT
எஸ் பி ஜெயக்குமார்
குழந்தைகளை கடத்தி செல்ல வெளிமாநிலங்களில் இருந்து நபர்கள் வந்திருப்பதாகவும், குழந்தை கடத்த முயன்ற போது பொதுமக்கள் பிடித்து அடித்ததாக சமூக வலைதளம் மூலம் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இதனால் மக்களிடையே குழப்பம், பீதி மற்றும் அச்சம் ஏற்படுகிறது . இது போன்ற சித்தரிக்கப்பட்ட வீடியோ புகைப்படங்களை பரப்புவது சட்டப்படி குற்றம் வதந்திகளை சமூக வலைதளங்களில் பகிரும் நபர்கள் மீது சட்டபூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.