இங்கிலாந்து மக்களவை தேர்தலில் ஒரு தமிழர் போட்டி

இங்கிலாந்து வரலாற்றில் முதன் முறையாக திருவாரூரை சேர்ந்த தமிழர் சதீஸ் ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

Update: 2024-06-06 16:50 GMT

இங்கிலாந்து

இங்கிலாந்து வரலாற்றில் முதன் முறையாக திருவாரூரை சேர்ந்த தமிழர் சதீஸ் ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டி. லண்டன். திருவாரூரை பூர்வீகமாக தமிழர் திரு சதீஸ் ராமதாஸ் ஜுலை 4 ஆம் தேதி நடக்க இருக்கின்ற இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் லண்டன் ஈஸ்ட்ஹாம் தொகுதியில் சுயேட்சையாக போட்டி இடுகிறார்.

இன்று லண்டனில் மனுதாக்கல் செய்த திரு சதீஸ் ராமதாஸ் ஈஸ்ட்ஹாமில் வாழக்கூடிய தமிழ் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவேன் என்றும் எல்லோருக்குமான பாராளுமன்ற உறுப்பினராக செயலாற்றுவேன் என்றும் செய்தியாளர்களிடம் பேசினார்.

Tags:    

Similar News