திருவேங்கடம் : கழுதை பால் விற்பனை விறுவிறுப்பு

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கழுதை பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

Update: 2024-02-09 05:53 GMT
 கழுதை பால் விற்பனை 
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கழுதை பால் விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது. கழுதை பால் குடித்தால், குழந்தைகளுக்கு உடல் ரீதியில் நன்மை அதிகரிக்கும் என்று பெரியவர்கள் சொல்வதால் அதனை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதில் தாய்மார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கழுதை பால் விற்பவர்கள் மதுரை இருந்து ஒரு குழுவாக வந்து தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தனித்தனியாக பிரிந்து சென்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 10 மில்லி கொண்ட ஒரு சங்கு கழுதை பாலை ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News