திருவிளக்கு பூஜை

பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரை அருகே உள்ள பவானி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-12-29 09:34 GMT

பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரை அருகே உள்ள பவானி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது எழுந்தருளி பிரசித்தி பெற்ற பவானி அம்மன் திருக்கோயில். இக்கோவிலில் ஆடி மாதம் ஆடி திருவிழா 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும் ஆடி மாதத்தில் இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி என அண்டை மாநிலங்களில் இருந்து சனிக்கிழமை பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதி எடுத்து தங்குவர் .

பின்னர் முடி காணிக்கை மண்டபத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் மொட்டை அடித்தும் ஆடு, கோழி என பலியிட்டு பொங்கல் மண்டபத்தில் வாடை பொங்கல் வைத்து காலை வளாகத்தில் உள்ள வேப்பமரத்தடியில் படையல் இட்டு உடல் முழுவதும் வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து தர்ம தரிசனம், கட்டண வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந் நிலையில் மார்கழி மாதம் பௌர்ணமியை யொட்டி உலக நன்மை வேண்டி, பொதுமக்கள் நோய் இன்றிவாழவும்,108.பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமர்சையாக ஆலய உட்புற வளாகத்தில் நடைபெற்றது. பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம்,மலர்களால்அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

நிகழ்ச்சியின் முன்னதாக மூலவருக்கு பால், தயிர்,பன்னீர்,சந்தனம், தேன்,பன்னீர்,ஜவ்வாது குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருவாபரணங்களால், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஶ்ரீ பவானி அம்மனுக்குமகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், ஆகியோர் தலைமையில் ஆலய ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News