பாளையங்கோட்டையில் 208 திருவிளக்கு பூஜை
பாளையங்கோட்டையில் அமைந்துள்ள உச்சினிமாகாளி அம்மன் திருக்கோவிலில் 14ம் ஆண்டு 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தென் மாநிலங்களின் பிரபல விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா விழா குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் அடுத்ததாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள 12 அம்பாள் சப்பரங்களுடன் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்காண தசரா விழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 தினங்கள் நடைபெறும் இத்திருவிழாவில் உற்சவா் அம்மன் கொலு இருந்து (தவம்) மகிஷ சம்காரத்திற்கு செல்வது வழக்கம். விழாவில் முதல் 3 தினங்கள் துா்கைக்கும் அடுத்த 3 தினங்கள் லெஷ்மிக்கும் கடைசி 3 தினங்கள் சரஸ்திக்குமாக இத் திருவிழா நடைபெறுகின்றது. இதன் ஒரு நிகழ்வாக நேற்று இரவில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள உச்சினிமாகாளி அம்மன் திருக்கோவிலில் 14ம் ஆண்டு 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவா் அம்மன் இருக்கன்குடி மாாியம்மன் அலங்காரத்திலும், உற்சவா் அம்மன் ராஜ அலங்காரத்திலும் அலங்காிக்கப்பட்டு இருந்தனா். விளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு பூஜைக்கு தேவையான அகல் விளக்கு, திாி, எண்ணெய், வெற்றிலை பாக்கு பழம் குங்குமம் மற்றும் புஷ்பம் வழங்கப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பக்தா்கள் பக்தியுடன் விளக்கை ஏற்றி குங்குமத்தாலும் பூக்களாலும் அா்ச்சனை செய்து திருவிளக்குக்கு பூஜை செய்தனா். நிறைவாக மூலவா் மற்றும் உற்சவா் அம்மனுக்கு நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்கள், குழந்தைகளுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வருகிற விஜயதசமி அன்று 12 சப்பரங்களில் அம்பாள் வீதி உலாவும் அதனை தொடா்ந்து மகிஷ சம்காரமும் நடைபெறுகிறது.