ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம்,கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மாட்டுப்பொங்கலையொட்டி நடைபெற்ற திருவூடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-17 05:23 GMT

திருவூடல் திருவிழா 

கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மாட்டுப்பொங்கலையொட்டி, திருவூடல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணி முதல் ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. ராமநாதீஸ்வரர் சுவாமி மற்றும் நந்தி தேவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாரதனை நடந்தது. தொடர்ந்து ஞானாம்பிகை சமேத சந்திரசேகர் சுவாமிகள் சூரிய பகவானுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி, சுவாமிகள் வீதியுலா, மதியம் தேர்த்திருவிழா, கொடியேற்ற நிகழ்ச்சி, பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
Tags:    

Similar News