தியாகதுருகம் : குட்கா விற்ற கடைக்கு சீல்
Update: 2023-11-30 04:21 GMT
தியாகதுருகம் நகர பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி சண்முகம் தலைமையிலான குழுவினர் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புக்குளம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் கஜேந்திரன்,45; என்பவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. தகவலறிந்த தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் 5 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். வி.ஏ.ஓ., ராதா முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.