தியாகதுருகம்: 170 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

Update: 2023-12-05 08:02 GMT

சமுதாய வளைகாப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தியாகதுருகத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. தியாகதுருகம் ஒன்றியத்தைச் சேர்ந்த 170 கர்ப்பிணிகளுக்கு நடந்த வளைகாப்பு விழாவிற்கு ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி ஒன்றிய துணைச் சேர்மன் விமலா முருகன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் நிரஞ்சனா,பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் விழாவை நடத்தி வைத்தார்.விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் கலியன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், பாலு,சிவப்பிரகாசம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News