தொண்டநாட்டு அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா
திருவள்ளூர் மாவட்டம்,அம்மையார் குப்பத்தில் அமைந்துள்ள தொண்டநாட்டு அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அருகே அம்மையார் குப்பத்தில் சிறப்பு பெற்ற தொண்டநாட்டு அம்மன் மற்றும் கன்னியம்மன் திருக்கோயில் சமீபத்தில் அதி நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை வெகு விமர்சியாக நடைபெற்றது.
திருக்கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றன.
கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி ,வாஸ்து சாந்தி அங்குரார்பணம் உட்பட 3 கால ஹோம பூஜைகள் கொண்ட பூஜைகள் தொடர்ந்து இன்று காலை மஹாபூர்ணாஹூதி ஹோம பூஜைகள் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று திருக்கோயில் சுற்றி பெருந்திரளான பக்தர்கள் கூடியிருக்க ஆலய கோபுர கலசத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பகத்ர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக விழாவில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் முன்னாள் திமுக பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி, தொண்டை நாட்டு அம்மன் மற்றும் கன்னியம்மன் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.