தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று (ஜன.13) முதல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-01-13 02:41 GMT
வங்க கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவிலலை. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை சீரானதைத் தொடர்ந்து இன்று (ஜன.13) முதல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என்று தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீன்பிடி துறைமுகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..