ரவெல் 25ம்ஆண்டு நினைவு நாள்: நலதிட்ட உதவிகள் வழங்கல்
தூத்துக்குடியில் என்.ரவெல் 25ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 500 பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-03-14 03:43 GMT
நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தில் பரவர் ஊர் கமிட்டிக்கு சொந்தமான ரவெல் ஜோஸ்பின் அம்மாள் நூற்றாண்டு மண்டபத்தில் வைத்து அய்யா என். ரவெல் 25ம்ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டது. இதில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் தொழிலதிபர் ஜெனோவெல் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாதா கோயில் பங்குதந்தை குமார்ராஜா, லூர்தன்னை ஆலய பங்குதந்தை புருனோ, முன்னாள் மேயர் (பொ) சேவியர், பரவர் ஊர் கமிட்டி தலைவர் ஜெயராஜ், குரூஸ் பர்னாந்து மக்கள் மன்ற தலைவர் இக்னேஷியஸ், விசை படகு தலைவர், சேவியர் வாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.