பசுமை வெளி பூங்கா பணி - மாவட்ட வன அலுவலர் ஆய்வு
தூத்துக்குடி சிப்காட்டில் பசுமை வெளி பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட வன அலுவலர் மு.மகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் 33 சதவீதம் பசுமை மரங்கள் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவீதம் மட்டுமே உள்ளன. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 33 சதவிகிதம் மரங்கள் இருக்க வேண்டும். ஆனால் மிகக்குறைந்து 5 சதவீத மரங்கள் மட்டுமே உள்ளன. அதனால் அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், சிப்காட் நிர்வாகமும், மற்றும் அரசு அனைத்து துறைகளும் மரக்கன்றுகளை வளர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி சிப்காட் இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க்கில் "சிப்காட் பசுமை வெளி பூங்கா" அமைக்கப்பட்டு வருகிறது. பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட வன அலுவலர் மு மகேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பூங்கா அமைக்கும் பணியில் ஈடுபட்ட வந்த பணியாளர்களிடம் மரக்கன்றுகளை எவ்வாறு வளர்ப்பது, மரக்கன்றுகளை எவ்வாறு குழி தோண்டி வைப்பது, பாலிதீன் கவரில் உள்ள மரக்கன்றுகளை எவ்வாறு பிரித்எடுப்பது, மரக்கன்றுகள் சாய்ந்து விடாமல் இருக்க குச்சிகளில் எந்த முறைப்படி கயிறுகளை கட்டுவது, ஒரு மரக்கன்றுகளுக்கு எந்த அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். மேலும் மரக்கன்றுகள் பராமரிக்கும் முறைகளை பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். பூங்கா அமைக்கும் பணியின் ஆய்வின் போது கோவில்பட்டி வன சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர், எஸ்.ஜே.கென்னடி, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பானுமதி, சமூக ஆர்வலர் முருகபெருமாள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.