38 மணி நேர போராட்டம், கிராம மக்கள் உதவி - பயணிகள் நெகிழ்ச்சி

Update: 2023-12-21 02:33 GMT

மீட்கப்பட்ட பயணிகள் 

ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தால் சிக்கித் தவித்த பயணிகள் மீட்க பட்டு, சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்தடைந்தது. மயிலாடுதுறையை பகுதியைச் சேர்ந்த 40 பேர் அந்த ரயிலில் வந்தனர். வந்த பயணிகள் கூறுகையில், ரயிலில் சிக்கிக்கொண்ட 38 மணி நேரம், அனைத்து உடைகளும் நனைந்து விட்டதால், ஈர உடையோடு இருந்தோம், அப்பகுதி கிராமவாசிகள், பால், குடிநீர் போன்ற மிக அத்தியாவசிய தேவைகளை, நிறைவேற்றி தந்தனர். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை சுற்றிலும், 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீர் சூழ்ந்தது. ரயில் நிலையத்தில் இருந்தாலும் ,ரயில்வே நிர்வாகம் உணவுக்கு ஏற்பாடு செய்து தரவில்லை. அந்த பகுதி மக்கள் கொடுத்த அரிசி ,பருப்பைக் கொண்டு எங்களுடன் ரயிலில் வந்த மாஸ்டர் ஒருவர், எங்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தார் என்றனர். ரயில்வே நிர்வாகம் உணவுக்கு கூட ஏற்பாடு செய்து தரவில்லை. கிராம மக்கள் ஒத்துழைப்புடனேயே அந்த சிரமமான நாளை கடந்து வந்தோம் என்றனர்.
Tags:    

Similar News