லாட்ஜில் பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
Update: 2023-12-20 09:20 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும் பெண்களும் வந்து செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் நேசமணி நகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேற்று மதியம் லாட்ஜில் அதிரடியாக சென்று சோதனைத்தனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 35 வயதுடைய பெண் ஒருவருடன் மூன்று ஆண்கள் இருந்தனர். விசாரணையில் அந்த பெண் முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் எனதெரிய வந்தது. இவரை லாட்ஜ் உரிமையாளர் சேம் டேவிட்சன் என்பவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. மேலும் உல்லாசமாக இருந்த பெருவிளை அப்துல் முத்தலில் (37), முண்டவிளை நாகராஜன் (55), மற்றும் நெல்லை மாவட்டம் வடக்கூரை சேர்ந்த விவசாயி பெருமாள் (50) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான லாட்ஜ் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.