பணம் வைத்து சூதாடிய மூவர் கைது
அத்திப்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
Update: 2024-01-01 10:21 GMT
அத்திப்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய மூவர் கைது.ரூ.200- பறிமுதல். கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அத்திப்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லை கரசிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை ஐந்து முப்பது மணி அளவில், அத்திப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகிலுள்ள இந்திரா நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட அத்திப்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயபாலன், பாலுசாமி, அத்திப்பாலத்தைச் சேர்ந்த ராமலிங்கம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200 ஐ பறிமுதல் செய்த காவல்துறையினர், பின்னர் மூன்று பேரையும் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க. பரமத்தி காவல்துறையினர்.