கூடுதல் வட்டி கேட்டு பெண்ணை துன்புறுத்திய மூன்று பேர் கைது
கடன் கொடுத்த பணத்திற்கு கூடுதல் வட்டி கேட்டு பெண்ணை அவமதித்து துன்புறுத்திய மூன்று பேர் கைது.
Update: 2024-03-17 12:09 GMT
கரூர் மாவட்டம் தெற்கு காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி ரேவதி வயது 36. இவர் பசுபதிபாளையம், ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள செல்வ நகர் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம், மேலப்பாளையம், எஸ்.வெள்ளாளப்பட்டி அருகே உள்ள வடக்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் ரமேஷ் குமார் வயது 36 என்பவரிடம் ரூபாய் 80 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனுக்காக ரூபாய் 100-க்கு ஐந்து ரூபாய் வட்டி தருவதாக ஒப்புக்கொண்டார். மேலும் இந்த கடனுக்காக ரேவதிக்கு சொந்தமான வீடு, தோட்டம், வீட்டு மனை உள்ளிட்டவைகளை ஈடாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாங்கிய கடனில் ரூபாய் 70 லட்சத்து, 69 ஆயிரத்து 450 திருப்பி செலுத்தி உள்ளார் ரேவதி. இதனிடையே மார்ச் 11ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில், ரமேஷ் குமார் மற்றும் அவரது சகாக்கள் ராஜேந்திரன் மற்றும் கதிர்வேல் ஆகியோருடன் சென்று, ரேவதியிடம் கூடுதல் வட்டி கேட்டு, ரேவதியை அவமதித்து துன்புறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேவதி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். இது தொடர்பாக ரமேஷ் குமார், ராஜேந்திரன், கதிர்வேல் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.