வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட மூவர் கைது

தொடர் வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த மூவரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-02-07 04:47 GMT

வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட மூவர் கைது

தொடர் வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த மூவரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை அதிரடியாக கைது செய்து வழக்கம் போல் மாவு கட்டு போட்டு சிறையில் அடைத்தனர். கோயில் நகரம், பட்டு நகரம் மற்றும் தொழிற்சாலை நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். தொழிற்சாலைகளில் பணி புரியும் பணியாளர்கள் இரவு மற்றும் அதிகாலை இரு நேரங்களில் பணி முடித்து திரும்பும் நிலையில் வழிப்பறி அதிக அளவில் நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து புகார்கள் வந்தது. இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையங்களிலும் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் வழிப்பறி மற்றும் எதிரிகள் மீது கொலை முயற்சியும் மேற்கொள்ள துணிந்த மூன்று பேரை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவ்வகையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சதீஷ், வெங்கடேசன் மற்றும் பரத் ஆகியோரை கைது செய்ய முயற்சித்த போது தப்பி ஓடிய போது தவறி விழுந்ததில் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு காவல்துறையிடம் சிக்கினர்.இவர்கள் மூவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்ட கொள்ளையர்களை காவல்துறை கைது செய்து வழக்கம் போல் மாவு கட்டு போட்டது பொது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
Tags:    

Similar News