அரசு மது பானங்கள் விற்ற மூவர் கைது

குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் அரசு மது பானங்கள் விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-03 16:36 GMT

மது விற்பனை 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் அரசு மது பானங்கள் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

பள்ளிபாளையம் சாலை கவுரி மெஸ் அருகில், கோட்டைமேடு, ராஜம் தியேட்டர் அருகே ஆகிய இடங்களில் மது பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அறிந்து, நேரில் சென்ற போலீசார் அங்கு மது விற்றுக்கொண்டிருந்த ராஜா, 52, முருகன், 40, சேகர், 32, ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 160 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

மது விற்ற செல்வகுமார், ஜான் பீட்டர் தலைமறைவாகினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News