முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலய திருவிழா நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலய திருவிழா நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்,

Update: 2024-04-26 06:41 GMT
புளியங்குடியில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலய திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் இன்று காலையில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு நாள் கால் நடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் உட்பட நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
Tags:    

Similar News