விராலிமாலை அருகே பஸ் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம்!
விராலிமாலை அருகே பஸ் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-14 15:58 GMT
காவல் நிலையம்
விராலிமலை அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திருச்சியில் உள்ள அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதற்காக பூதக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
இதில் கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார். பின்னால் இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த ராமசாமி அவரது மனைவி ஜெயலட்சுமி இருவரும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர்.
மூன்று பேரையும் அப்பகுதியினர் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இது குறித்து விராலிமலை போலீசார் பஸ் டிரைவர் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.