நேமம் அரசு மருத்துவமனையில் திருடிய பெண் உட்பட மூவருக்கு சிறை

நேமம் அரசு மருத்துவமனையில் திருடிய பெண் உட்பட மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2024-04-15 16:21 GMT

கோப்பு படம் 

திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் வெள்ளவேடு அடுத்துள்ள நேமம் ஊராட்சியில் அமைந்துள்ளது அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் 10 பேன் மற்றும் 2 ஏசி வெளிப்புற யூனிட் திருடு போனது.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா கொடுத்த புகாரின்படி வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அரசு மருத்துவமனை அருகே தனியார் நிலத்தில் கட்டட பணி புரிந்து வந்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், 37, பூந்தமல்லி பக்தவச்சலம் பகுதியைச் சேர்ந்த கணேசன், 48, மற்றும் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, 23 ஆகிய மூவரும் திருடியது தெரிந்தது.

மூவரையும் கைது செய்த வெள்ளவேடு போலீசார், திருடு போன பொருட்களை மீட்டனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News