மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-13 14:28 GMT

சூதாட்டம் 

 கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே 12ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில், அருகிலுள்ள திருக்காடு துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள மயானம் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, திருக்காடு துறை பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, பாலா, தினேஷ் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200 ரூபாயும் பறிமுதல் செய்தனர்.

மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News