மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சியில் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட் ட மூன்று பேரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி, தென்னூர் ஆழ்வார்தோப்பை சேர்ந்த ஷேக் தாவுத் என்கிற கோழி ஷேக் (வயது 38), தென்னூர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூசைராஜ் (34), அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த யாசர் அராபத் (28) ஆகியோர் வழிப்பறி வழக்கில் பாலக்கரை போலீசாரால் கைது செய் யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணையில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி தனியார் மாநகர பஸ்சில் பயணித்த மார்க் கெட்டிங் மேலாளர் டிராவல்ஸ் பேக்கில் வைத்து இருந்த 23½பவுன் தங்கநகைகளை திருடிய வழக்கிலும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதில் சூசைராஜ் மீது காந்தி மார்க் கெட் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 9 வழக்குகளும், ஷேக்தாவுத் மீது காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், கோட்டை போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக் குகளும் உட்பட 22 வழக்குகளும், யாசர் அராபத் மீது தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகள் உட்பட 15 வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து சூசைராஜ், ஷேக் தாவுத், யாசர் அராபத் ஆகிய 3 பேரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் திருச்சி சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.