போதையில் வாகன ஓட்டிய மூன்று பேருக்கு ரூபாய் 43 ஆயிரம் அபராதம்

தக்கலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போதையில் வாகனம் ஓட்டிய மூன்று பேருக்கு 43 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Update: 2024-03-26 16:54 GMT

வாகன சோதனை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கை தாறுமாறாக ஓட்டி வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கண்ணாட்டுவிளை ஆழ்வார்கோயில் . பகுதியை சேர்ந்தஐயப்பன் பிள்ளை என்பது தெரியவந்து.மேலும் அவர் குடிபோதையில் பைக்கை ஓட்டி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர் இதையடுத்து ஐயப்பனுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதே போல் குடிபோதையில் லோடு ஆட்டோவை ஓட்டி வந்ததாக தக்கலை கொல்லைக்குடிமுக்கு பகு தியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே குடிபோதையில் மற்றொரு லோடு ஆட்டோவை ஓட்டி வந்த சூழால் பகுதி முளமூட்டுக்குழிவிளையை சேர்ந்த பிபின்ராஜ் என்பவர் சிக்கினார். அவருக்கும்போலீசார் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இதையடுத்து பைக் மற்றும் இரண்டு ஆட் டோக்களையும் பறிமு தல் செய்த போலீசார் அவற்றை தக்கலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
Tags:    

Similar News