கரூர் அருகே 3 பேர் கைது

மூலகாட்டனூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2024-05-27 15:52 GMT

பணம் வைத்து சூதாட்டம்

 கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு பெண் காவல் உதவி ஆய்வாளர் அழகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 26 ஆம் தேதி மாலை 4 மணி அளவில், மூலகாட்டனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அருகில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தொழில்பேட்டை ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த விஜயகுமார், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, வடக்கு பாளையத்தை சேர்ந்த அரசகுமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 150-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News