பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. .
ராமனூரில் பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அழகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 24ஆம் தேதி மாலை 5:15-மணி அளவில், ராமனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் செயல்படும் டிவிஎஸ் டெக்ஸ் எதிர்புறம் உள்ள முள் காட்டில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.
இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த திலீப் குமார், ராமனூர் ராஜா நகரை சேர்ந்த வேலுச்சாமி, பசுபதி பாளையம் மென்காட்டு தெருவை சேர்ந்த மணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.100 ஐ பறிமுதல் செய்த காவல்துறையினர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.