துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி!
திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-24 16:29 GMT
துரியோதனன் படுகளம்
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே பன்னீர்தாங்கல் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மகாபாரத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடைபெற்றது. இந்த நிலையில் காலையில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.