திருவதிகை பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உத்ஸவம்
திருவதிகையில் தைப்பொங்கல் ஆற்றுத்திருவிழாவை முன்னிட்டு உத்ஸவர் ஸ்ரீ சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெற்றது.;
Update: 2024-01-21 03:14 GMT
சரநாராயண பெருமாள் உற்சவம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் தை மாதமுதல் வெள்ளியை முன்னி்ட்டு மூலவர் ஸ்ரீசரநாராயண பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தைப்பொங்கல் ஆற்றுத்திருவிழா முன்னிட்டு உத்ஸவர் ஸ்ரீ சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.