திருச்செந்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் திமுகவில் ஐக்கியம்

திருச்செந்தூா் ஒன்றிய அதிமுக செயலா் ராமச்சந்திரன், அமைச்சர் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

Update: 2024-01-29 14:06 GMT

திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன்வளம்-மீனவா் நலன், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை, அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த ராமச்சந்திரன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் உமரி சங்கா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News