திருச்செங்கோடு : 300 க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-05-13 06:48 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 33 பள்ளிகளை சேர்ந்த 395 வாகனங்களில் 300 வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டது.  மீதமுளை 95 வாகனங்கள் நாளை மறுநாள் ஆய்வு செய்யப்பட உள்ளது.  கேஎஸ்ஆர்  கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்விற்கு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமை வகித்தார். ஆய்வில் திருச்செங்கோடு காவல் துறை துணை கண்காணிப்பாளார் இமயவரம்பன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மரகதம், முதன்மை கல்வி அலுவரின் நேர்முக உதவியாளர் டாக்டர் சந்திரசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், ஆய்வாளர் பாமப் பிரியா, ஆகியோர் கலந்து கொண்டனர். 

பள்ளிவாகனங்களின் பதிவுச் சான்று, காப்புச் சான்று, அனுமதி சீட்டு, ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், தீயணைப்பு கருவி, மருத்துவ முதல் உதவி பெட்டி,வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அரசின் விதிமுறைப் படி 22 அம்சங்கள் வாகனத்தில் பொருத்தப் பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.  குறைகளை கண்டறிந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டி ஆய்வறிக்கை கொடுத்து உள்ளனர். ஒரு வார காலத்திற்குள் குறைகளை சரி செய்து மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

முன்னர் வாகன ஆய்வு செய்த இடங்களில் பெரும்பாலான வாகனங்களில் பின்புறம் உள்ள கேமரா வேலை செய்வதில்லை என தெரிய வந்ததாக வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி  தெரிவித்தார். இங்கு நடைபெறும் ஆய்வில் ரியர் கேமரா மிக முக்கியமாக ஆய்வு செய்யப் படும். என தெரிவித்தார். ஆய்வு பணிகள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் கூறியதாவது. அரசு அறிவித்துள்ள 22  அம்சங்கள் பள்ளி கல்லூரி வாகனங்களில் உள்ளதா என்பது முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின் தான் பள்ளி வாகனங்களில் ரோட்டில் செல்ல அனுமதிக்கப் படும். சுட்டிக் காட்டப்டும் தவறுகளை சரி செய்து மறு ஆய்வு செய்த பின் தான் அனுமதி வழங்கப்படும் ஓட்டுநர்கள உடல் நலத்தை பேண அறிவுறுத்தப் பட்டுள்ளது. அவர்களுக்கு இங்கு கண் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டது. என கூறினார்.

Tags:    

Similar News