வழக்கறிஞரின் தரக்குறைவாக பேசிய இருவர் கைது
வழக்கறிஞரின் தரக்குறைவாக பேசியதாக கைதான இருவர் சிறையில் அடைப்பு;
Update: 2024-04-08 05:01 GMT
வழக்கறிஞரை தரைக்குறைவாக பேசியவர் கைது
வழக்கறிஞரை தரைக்குறைவாக பேசியவர் கைது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வழக்கறிஞரின் தரக்குறைவாக பேசிய இருவர் மீது வழக்கறிஞர்கள் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில் திட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், கைது செய்யவும் வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன்படி விசாரணை நடத்திய போலீசார் சங்கர் என்பவரை கைது செய்தனர்.
வழக்கில் நவநீதன் என்பவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார் .வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ்பாபு இருவருக்கும் 13 நாட்கள் சிறை காவல் விதித்து சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.