மேலப்பாளையம் மகளிர் கல்லூரியில் 13வது ஆண்டு பட்டமளிப்பு விழா
கல்லூரியில் படித்த 31 மாணவர்களுக்கு பட்டம்;
Update: 2024-03-10 12:39 GMT
கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் இர்பான் ஹுதா மகளிர் அரபிக் கல்லூரியில் 13வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அதில் கல்லூரி தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார். செயலாளர் முஸ்தபா ஜாபர் அலி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியில் படித்த 31 மாணவர்களுக்கு பட்டத்தை ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் காஜா மொய்தீன் பாக்கவி வழங்கினார்.