திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-23 15:38 GMT

மாநகராட்சி அலுவலகம்
நெல்லை மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட தச்சநல்லூர் பைபாஸ் பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளின் மீது ஆக்கிரமித்து கான்கிரீட் தளம் அமைத்து கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நின்று தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்வேறு புகார் அளித்தும் இதுவரை சரி செய்யாத மாநகராட்சி அலுவலகத்தை அந்த பகுதி பொதுமக்கள் விரைவில் முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளனர்.