திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நீட்டிப்பு
திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி புறநகர் மாவட்டம்,தென்காசி, விருதுநகர் மாவட்டம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து, இரவு 07.00 மணிக்கு புறப்படும், மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) 4னடிசம்பர்31, ஜனவரி 07, 14, 21, 28 ஆகிய கிழமைகளில் இயக்கப்பட்டு, மறுநாள் காலை 07.30 மணிக்கு, மேட்டுப்பாளையம் சென்று சேரும்.இதுபோல மறு மார்க்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, இரவு 07.45 மணிக்கு புறப்படும், திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு, மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான, பயணச்சீட்டு முன்பதிவு, கடந்த (டிசம்பர்) 30ஆம் தேதி, சனிக்கிழமை காலை 8 மணி முதல், ஏற்கனவே துவங்கியுள்ளது என்பது, குறிப்பிடத்தக்கதாகும்