திருப்பத்தூர்:சாலை விரிவாக்கப் பணிகள் -அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு
திருப்பத்தூர் அருகே2.90 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.;
அமைச்சர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - அன்னாண்டபட்டி கிராம சாலை 3.50 மீட்டராக இருந்த சாலையை போக்குவரத்து நெரிசல் காரணமாக 5.50 மீட்டர் சாலையாக விரிவு படுத்தி அதற்கு சுமார் 2.90 கோடி நிதி ஒதுக்கி தரைமட்ட பாலம் மற்றும் சாலை விரிகாக்க பணிகள் நடைபெற்று வருவதை குறித்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு மேற்கொண்டார். சாலைகள் அளவுகள், தரம் குறித்தும் ஆய்வு செய்து அதிகாரிகள் களத்தில் இருக்கிறார்களா? என்றும்ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கடந்த காலம் பெய்த மழையின் காரணமாக இந்த பகுதியில் அதிக வெள்ளம் பாய்ந்துள்ளது. அதற்கு பாலம் அமைக்க கோரிக்கை வைத்தனர். பாலம் கட்டி சாலையை விரிவுபடுத்தி உள்ளோம். நான் வருவதை நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க. நான் எப்போதும் திடீர் திடீர் என்று தான் ஆய்வு மேற்கொள்வேன். அதிகாரிகள் இருக்கிறார்களா? வேலை எப்படி நடக்கிறது என்று பார்ப்பேன். அதே போன்று இதனையும் ஆய்வு செய்தேன். என்றார். அப்போது உடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.