தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.94.20 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிக்கான பூமி பூஜை.

திருப்பூரில் தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

Update: 2024-02-24 18:30 GMT

நலத்திட்ட பணிக்கு பூமி பூஜை

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.94.20 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிக்கான பூமிபூஜையை சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் சூசையாபுரம் மேற்கு பகுதியில் ரூ.24.20 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால், சிறுபாலம் மற்றும் காங்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி, ராயபுரம் விரிவு மற்றும் விநாயகபுரம் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, செம்மேடு ஏ.டி.காலனி பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய நலக்கூட்டம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது.

இதனை செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மேலும், பூலவாரி சுகுமார்நகர் ரூ.7.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகத்தையும் செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், பகுதி செயலாளர்கள் மு.க.உசேன், மியாமி அய்யப்பன், மாவட்ட துணை செயலாளர் டிஜிட்டல் சேகர், வார்டு செயலாளர்கள் ராமகிருஷ்ணன், முகமது அலி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் திவாகரன், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News