திருப்பூர்: தபால் வாக்கு பிரிக்கும் இடத்தில் வாக்குவாதம்
திருப்பூரில் பாஜக கட்சியை சேர்ந்த நான்கு பேர் முன் வரிசையில் அமர்ந்ததால் தபால் வாக்கு பிடிக்கும் இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது,.
Update: 2024-06-04 03:46 GMT
திருப்பூர் எல் ஆர் ஜி மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட உள்ள நிலையில் முன்னதாக தபால் வாக்குகள் பிரிக்கும் பணியானது நடந்து வருகிறது. இந்த நிலையில் தபால் வாக்குகள் பிரிக்கப்படும் இடத்தில் பாஜகவை சேர்ந்த முகவர்கள் நான்கு பேர் முன்னிலையில் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர் இதனால் மற்ற கட்சியினருக்கு முன் வரிசையில் இடம் கிடைக்காததால் அங்கு சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.