திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சியினருக்கும் ஆலோசனை வழங்கினார்.

Update: 2024-03-18 16:08 GMT

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திருப்பூர் மாநகராட்சிஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் 15 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளதால் வேட்பாளர்கள் எவ்வாறு தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவைகளை நடத்த அனுமதி பெற இணையதளம் மூலமாக எவ்வாறு படிவம் பூர்த்தி செய்து அனுமதி பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர் உடன் துணை ஆணையாளர் சுந்தர்ராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News