திருப்பூர் மாநகராட்சி பசுமை நகரமாக பதிவு

திருப்பூர் மாநகராட்சி சிஐஐ அமைப்புடன் இணைந்து இந்திய பசுமை வர்த்தக மையத்தில் பசுமை நகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-25 06:49 GMT

பசுமை நகரமாகும் திருப்பூர் 

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் முன்னிலையில் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் பசுமை நகர திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியானது சிஐஐ யுடன் இணைந்து இந்திய பசுமை வர்த்தக மையத்தில் பசுமை நகரமாக பதிவு செய்துள்ளதன் மூலம் தமிழகத்திலேயே முதன்முறையாக உலகத்தரம் வாய்ந்த பசுமையான நகர்ப்புற சூழலை அடைவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மாநகரின் காற்று தரம் பசுமையான சூழலை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் சுப்ரமணியம், சிஐஐ தலைவர் சங்கீதா, வேல் கிருஷ்ணா, துணைத் தலைவர் இளங்கோ, மில்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News