திருப்பூர் அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் 1960 முதல் 2023 வரை கல்வி பயின்று சென்ற அரசுப்பள்ளி முன்னாள் மாணவிகள் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-13 14:47 GMT

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

திருப்பூரில் 1960 முதல் 2023 வரை கல்வி பயின்று சென்ற அரசுப்பள்ளி முன்னாள் மாணவியர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூரில் 1942 ஆம் ஆண்டு ராயபுரம் பகுதியில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட ஜெய்வாபாய் பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது .

இப்பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 1960 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை இந்த பள்ளியில் கல்வி பயின்று சென்ற முன்னாள் மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நீண்ட வருடங்களுக்குப் பின்பு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதில் ஒரு சிலர் தங்கள் கல்வி பயின்ற வகுப்பறைகளுக்கு சென்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இதனைத் தொடர்ந்து தங்கள் சந்தித்து கொண்டதன் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ,  முன்னாள் மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News