தமாகா வேட்பாளர் விஜயசீலன் வாக்குறுதி

வெள்ளையனே வெளியேறு இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்து தருவேன் என்று தமாகா வேட்பாளர் விஜயசீலன் வாக்குறுதி அளித்தார்.;

Update: 2024-04-11 02:26 GMT

பிரச்சாரம்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயசீலன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பூர், கடலையூர், எட்டயபுரம், கீழஈரால், இளம்புவனம், சோழபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், வாக்கு சேகரிக்க வந்த விஜயசீலனுக்கு கடலையூர் கிராமத்தில் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

இதைத் தொடர்ந்து கடலையூர் கிராமத்தில் பேசிய வேட்பாளர் விஜயசீலன், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகள் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடலையூரைச் சேர்ந்த வெயிலுகந்த முதலியார் தலைமையில் 34 நெசவாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஆங்கிலேயர் துப்பாக்கிச் சூட்டிற்கு சங்கலிங்க முதலியார் என்பவர் உயிரிழந்தார். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.

Tags:    

Similar News