த.மா.கா. சார்பில் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா

சேலம் புறநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-29 04:29 GMT

ஜி.கே.வாசன் பிறந்தநாள் 

சேலம் புறநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.யின் 59-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அயோத்தியாப்பட்டணம் கோதண்ட ராமர் கோவிலில் மாவட்ட தலைவர் வக்கீல் எஸ்.கே.செல்வம் தலைமையில் சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாநில இணை செயலாளர் சின்னதுரை, மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், தொழிற்சங்க தலைவர் வாழப்பாடி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து ஆட்டையாம்பட்டி நகர த.மா.கா. சார்பிலும், அயோத்தியாப்பட்டணம் வட்டார, பேரூராட்சி த.மா.கா. சார்பிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் வாழப்பாடி நகர த.மா.கா. மற்றும் தொழிற்சங்கம் சார்பில் வாழப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள வெங்கல விநாயகர் கோவிலில் ஜி.கே.வாசன் பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜை நடந்தது. மேலும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலாளர் நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணன், நாகராஜ், முனுசாமி, அகிலன், வட்டார தலைவர்கள் தனபால், கரட்டு மணி, ராமச்சந்திரன், நகர தலைவர்கள் வெங்கடேசன், தேவராஜன், ஷாஜகான், மாணவரணி மாவட்ட தலைவர் இளங்கோ, இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News